Posts

சிறுமைகளும் அவமதிப்புகளும் - பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி

  பியோதர்   தஸ்தாயெவ்ஸ்கி   அவர்கள் ரஷ்ய மொழியில் எழுதிய The Insulted and Humilated   நாவலைத்   தமிழில் எம்.ஏ.சுசீலா அவர்கள் தமிழில்   மொழிபெயர்த்துள்ளார்கள் . இந்த   நாவலைச்   சமீபத்தில் படித்து முடித்தேன்.   அதனைப்   பற்றிய என்   ரசனையுரை .  கதையின் சுருக்கம்.   19 ம் நூற்றாண்டில்  செயின்ட்   பீட்டர்ஸ்பெர்க்  நகரத்தில்  இவான்   பெத்ரோவிச்  ( வான்யா ) என்ற ஒரு எழுத்தாளன் கடந்த வருடத்தில்  அவனைப்  பாதித்த நிகழ்வுகளை எழுதிக்கொண்டே, கதைசொல்லியாகவும் இருக்கிறான்.  பாகம் 1 வான்யா  தன்னை வளர்த்த  நிகோலாய்  மற்றும்  ஆனா  அவர்களின் மகள்  நடாஷாவை  விரும்புகிறாள்.  நடாஷாவுக்கும்  அவன் மீது காதல் வருகிறது.  வான்யா  ஒரு எழுத்தாளராக இருப்பது  நிக்கோலாய்க்கு  சற்று அதிருப்தி இருந்தாலும், அவன்  நாவலைப்  படித்த பிறகு  அவனைப்  புகழ்ந்து பெருமைப்படுகிறார்.  இதற்கிடையே  இளவரசன்  வால்கோவ்ஸ்கி  ...

காடு இட்டுச் செல்லும் பாதை

Image
அப்போது விகடனில் தொடராக வந்துகொண்டிருந்த சங்க சித்திரங்கள் படித்து, அதனை மனதில் அசைபோட்டுக்கொண்டிருந்த காலங்கள். வார நாட்களில் மேன்ஷனிலிருந்த அனைவரும் வேலைக்குச் சென்ற பிறகு, யாரோ துணி துவைக்கும் சத்தத்தையும், ஒளிரும் மின்சாரக் கம்பியில் அமர்ந்து கரைந்து செல்லும் காகத்தின் குரலையும் கேட்டுத் தாளமுடியாமல் இருந்த நாட்கள். அன்றைய மன நிலையில் யாரேனும் காடு பற்றிக் கேட்டிருந்தால், அவை கரிய இருட்டில் மரங்கள் அடர்ந்த வனத்தின் ஊடே செல்லும் ஒரு பாதை மட்டுமாகவே இருந்திருக்கக்கூடும். ஆழ்கிணறுக்குள் செல்லும் ஒரு சரடு போல. அதன் மறு முனையைக் கற்பனை செய்ய முயலும் தோறும், மூச்சடைத்து நீருக்குள்ளிருந்து வெளிவருவதுபோல இருக்கும். எதிர்கால பயம், தனிமை,  பதற்றம் என மனதுக்குள் பொங்கி வந்த வண்ணம் இருந்த ஒன்றின் படிமமாகவே காட்டை கற்பனை செய்திருப்பேன். அப்படி இருந்த நாட்களின் ஒன்றில் தான் காடு நாவல் வெளிவந்தது. கிரிதரனை மிக எளிதாகவே அடையாளம் கொண்டுகொள்ள முடிந்தது. அவன் ஒவ்வொரு முறையும் காட்டுக்குள் செல்லும்போதும் என் அகமும் அவனின் கைபிடித்துக் கொண்டு இருளுக்குள் நுழைந்தது. அவன் காட்டில் கண்ட  பூக்களைய...

பொற்குகை ரகசியம் - ஜெகதீஷ்

  பொற்குகை ரகசியம் - மெல்லிய உணர்வுகளின் வரைபடம். சமீபத்தில் என் மகளின் அறைக்குச் சாயம் அடிக்க அவளுக்கு பிடித்தமான நிறத்தைத் தேர்ந்தெடுக்கச் சொல்லியிருந்தேன். அவள் கொடுத்த அந்த நிறம் முதன்மை நிறங்களான சிவப்பு, நீலம், பச்சை என அல்லாமல் ஏதோ ஒரு நிறத்திலிருந்தது. இவை எப்படியும் கிடைக்கப்போவதில்லை என்று தைரியமாகக் கடைக்குச் சென்று அவரிடம் கொடுத்தவுடன் அவர் ஒரு வாளியை எடுத்து வந்து என் முன் திறந்தார். அதில் வெள்ளை நிறத்தில் சாயம் இருந்தது. அதில், இரண்டு சொட்டுகள் வேறு சில அடர் நிற சாயங்களைச் சேர்த்துவிட்டு ஒரு இயந்திரத்தில் சொருகிக் கலக்கித் திறந்தவுடன், அதில் நான் கேட்ட நிறத்தை ஒத்த சாயம் இருந்தது. பள்ளியில் படித்தது தான். ஆனால் அது தந்த உணர்வு வித்தியாசமாக இருந்தது. இந்த நிறத்தின் பெயர் என்ன? இன்னும் இரண்டு சொட்டுகள் அடர் நிறங்களின் சாயத்தைச் சேர்த்திருந்தால் அது வேறு ஒரு வண்ணமாக இருந்திருக்கும். அதன் பெயர் என்ன? இப்படி எண்ணிடலாகப் பெயரில்லா நிறத்தையும் அது ஒவ்வொன்றும் கொடுக்கும் உணர்வையும் அனுபவித்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.      அன்றாட வாழ்க்கையில் நாம் அடை...

இரு கடல் ஒரு நிலம் - விஸ்வநாதன்

Image
நான் பயணக் கட்டுரைகள் படித்தது குறைவு. அக்குறுகிய அனுபவத்தில் நான் கண்டுகொண்டது, பெரும்பாலான பயண கட்டுரைகள் அப்பயணத்தின் ஊடேயிருந்த இடங்களை அடர்த்தியான வரலாற்றுத் தகவல்களுடன் நம்மை ஒரு புள்ளியில் நிலை நிறுத்தி அனுபவிக்க வைத்துவிட்டு அங்கிருந்து தாவி வேறு ஒரு இடத்தை பற்றிப் பேசி செல்பவையாக இருக்கும். அது ஒரு விதத்தில் தகவல்களை அள்ளி தருபவையாக இருந்தாலும், பயணத்தின் தொடர் அனுபவத்தைத் தவறவிடுகிறது. படிப்பவர்களைப் பயணத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிடுகிறது. எந்த விதத்திலும் அது படிப்பவர்களையும் அப்பயணத்தை மேற்கொள்ளத் தூண்டி விடக்கூடியதாக இல்லாமல் இருக்கிறது. அதற்கான சரியான காரணம் தெரிவில்லையென்றாலும், அப்பயணக் கட்டுரைகளை எழுதுவதற்காகவே அப்பயணங்கள் செய்யப்படுவதாக இருப்பதால் பயணங்களின் அனுபவத்தைக் கடத்த தவறவிட்டு வெறும் தகவல் களஞ்சியமாக மாறிவிடுகிறது என்று எண்ணுகிறேன். மனம் திளைக்கப் பயணத்தை அனுபவித்துவிட்டு அதை எழுத வேண்டும் என்ற உந்துதல் வரும்போது எழுதப்படுபவை அந்த அனுபவத்தையும் அவர்கள் அறியாமலேயே எழுத்தில் கடத்திவிடுகிறார்கள். ஜெவின் "அருகர்களின் பாதை" அப்படி ஒரு அனுபவத்தை என்னு...

அஞ்சலை - கண்மணி குணசேகரன் - ரசனையுறை

Image
    அஞ்சலையை நான் பேருந்தில் பயணம் செய்த போது பார்த்திருக்கிறேன். அன்று அவள் சன்னலோரம் தவிப்பாய் அமர்ந்திருந்தாள். எங்கள் வயலில் அறுப்பு நாள் ஒன்றின் போது பார்த்திருக்கிறேன். தலையில் உள்பாவாடை ஒன்றைக் கட்டிக்கொண்டு ஆண் சட்டை அணிந்து களத்தில் நெல் அடித்துக்கொண்டிருந்தாள். சென்னையிலிருந்து எங்கள் ஊருக்குப் பயணம் செய்யும் வழியில் முந்திரி மரங்கள் நிறைந்த விருத்தாசலத்தைக் கடக்கும்போது ஒருமுறை பார்த்திருக்கிறேன். சாலையிலிருந்த வேகத்தடையில் கார் ஏறி இறங்கியபோது மஞ்சளும், சிவப்புமாயிருந்த முந்திரிப்பழத்தை இரு கைகளிலும் விரல்களுக்கிடையே லாவகமா நிறுத்தி எங்களை வாங்கச் சொல்லி கண்ணாடியில் முகம் பதித்துச் சென்றாள். சினிமா கொட்டகையில் சீட்டு வாங்கிவிட்டு உள்ளே செல்ல அனுமதிக்கக் காத்திருக்கும் இடைவெளியில் பார்த்திருக்கிறேன். வெளியே இருந்த நரிக்குறவர்கள் ஆடும் ஆட்டத்தைக் கண்டு பொங்கி வரும் சிரிப்பை அருகிலிருந்தவனின் தோளில் முகம் புதைத்துச் சிரித்துக்கொண்டிருந்தாள். இப்படி நிறைய இடங்களில் அஞ்சலயை கண் சிமிட்டும் ஒரு சில மணித்துளிகளில் இடைவெளியில் பார்த்திருக்கிறேன். இந்நாவலில் வாழ்ந்திருக்கும்...

கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் - ரசனையுரை

Image
    அசோகமித்திரன் அவரின் சினிமா துறை சார்ந்த அனுபவங்களை வைத்து ஒரு குறுநாவலாக எழுதியுள்ளார். கதை என்பது என்று ஏதும் இல்லாமல் நிகழ்வுகளை அதன் நுணுக்கத்துடன் மிகையுணர்ச்சி ஏதுமில்லாமல் அவர் எழுதும் சிறுகதையை போலவே இந்நாவல் அமைந்துள்ளது. பொதுவாக அவரின் கதையில் நிகழும் நிகழ்வுகள் படிக்கும்போது ஏற்படுத்தும் தாக்கத்தைவிட வேறு ஏதோ ஒரு பொழுதில் சட்டென நம்மை நிறுத்தி அதனை சிந்திக்க வைத்து அந்நிகழ்வு மெல்ல நம்முள் விரிவடைந்து விரிவடைந்து அதில் இருக்கும் ஒரு ஆழமான வாழ்க்கையின் ஒரு உண்மையை கண்டடைய வைக்கும் அந்த உணர்வு இந்நாவலிலும் ஏற்படுகிறது. இந்நாவலில் முதல் அத்தியாயத்திலேயே கிட்டத்தட்ட எல்லா கதாப்பாத்திரங்களையும் அறிமுகப்படுத்திவிடுகிறார். பின்பு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் முதல் அத்தியாயத்தில் வந்த வெவேறு கதாப்பாத்திரத்தின் வழியே காலத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து மற்றொன்றுக்கு தாவி சென்று கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு புள்ளியிலும் மனிதர்கள் அடைந்த ஏற்றமும் இறக்கமும் போகிறபோக்கில் மிகையில்லாமல் அது தான் யதார்த்த்தம் என்பது போல சொல்லி செல்கிறது. அது காட்டும் வாழ்க்கையின் சித்திர...

அம்மா வந்தாள் - தி ஜானகிராமன் - ரசனையுரை

Image
திரு. தி.ஜானகிராமன் அவர்கள் எழுதிய நாவலோ அல்லது சிறுகதைகளோ இதற்கு முன் படித்ததில்லை. அவரின் 'மோகமுள்' நாவலைப் பற்றிப் பரவலாக இலக்கிய உலகில் பலர் பேசி விமர்சித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். "அம்மா வந்தாள்" என்ற நாவலைப் பற்றியும் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் "நல்ல நாவல். படிக்கவேண்டும்" என்பதைத் தவிரப் பிற ஒன்றும் நினைவில் இப்போது இல்லை. எது இந்த நாவலை வாங்கத் தூண்டியது என்று இப்போது சரியாக நினைவில்லை. வாங்கி என் புத்தக அலமாரியில் படிக்க வேண்டும் என்ற வரிசையிலிருந்தது.  இந்நாவலில் வரும் கதைப்பின்னணி கும்பகோணத்தில் பிறந்த எனக்கு மிக நெருக்கமான ஒன்றுதான். பள்ளிக்குச் செல்லும் போது காவேரி ஆற்றைக் கடந்து திரும்பும் ஒரு திருப்பத்தில் வேத பாட சாலை ஒன்று இருக்கும். அதன் பெரிய சுவருக்குப் பின்னால் பல சிறுவர்களும் என் வயதொத்த இளைஞர்களும் வேதங்களை வாய் விட்டுப் படித்து மனனம் செய்து கொண்டிருப்பார்கள். சைக்கிளில் அதைக் கடக்கும் போது அவர்கள் வாய்விட்டு வேதங்களைச் சொல்வது என் பள்ளிக்கூடத்தில் வாய்ப்பாடுகளை மனனம் செய்ய அனைவரும் அமர்ந்து ஒரே குரலில் சொல்வது நினைவ...