Posts

Showing posts from July, 2022

The Old Man and the Sea - Ernest Hemingway

Image
சமீபத்தில் என் குடும்பத்துடன் ப்ளோரிடா மாகாணத்தில் தென் மேற்கே இருக்கும் கீ வெஸ்ட் (Key West) என்ற பல தீவுகள் அடங்கிய இடத்திற்குச் செல்ல முடிவெடுத்திருந்தோம். அங்குச் செல்ல வேண்டிய முக்கியமான இடங்களை என் மனைவியிடம் பார்க்கச் சொல்லியிருந்தேன். நான் சொன்னது போலவே அவளும் ஆராய்ந்து ஒரு சில இடங்களைக் குறித்துக்கொண்டு என்னிடம் கொடுத்தாள். அதில் ஒரு இடம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அது அமெரிக்காவின் தலை சிறந்த இலக்கிய எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) வாழ்ந்த வீடு கீ வெஸ்டில் இருந்தது. பார்த்தவுடன் மனதுக்குள் ஏனோ ஒரு குதூகலம் வந்து தொற்றிக்கொண்டது. நான் இதுபற்றி என் மகளிடம் சொல்ல அவளும் உற்சாகமானாள். இதுவரை அவர் எழுதிய எந்த புத்தகத்தையும் நானோ என் மகளோ படித்ததில்லை. ஆனால் தமிழின் சிறந்த இலக்கிய எழுத்தாளர்கள் அசோகமித்திரன், நகுலன் அவர்களின் உரையாடல் ஒன்றில் எர்னஸ்ட் ஹெமிங்வே புத்தகங்கள் பற்றிப் பேசியிருந்தது நினைவிருக்கிறது. அடுத்த நாளே என் மகள் என் வீட்டின் அருகில் இருக்கும் நூலகத்திலிருந்து எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய "The Old Man and the Sea" என்ற ஒரு நாவலை எடுத்து கொண்ட