அம்மா வந்தாள் - தி ஜானகிராமன் - ரசனையுரை
திரு. தி.ஜானகிராமன் அவர்கள் எழுதிய நாவலோ அல்லது சிறுகதைகளோ இதற்கு முன் படித்ததில்லை. அவரின் 'மோகமுள்' நாவலைப் பற்றிப் பரவலாக இலக்கிய உலகில் பலர் பேசி விமர்சித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். "அம்மா வந்தாள்" என்ற நாவலைப் பற்றியும் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் "நல்ல நாவல். படிக்கவேண்டும்" என்பதைத் தவிரப் பிற ஒன்றும் நினைவில் இப்போது இல்லை. எது இந்த நாவலை வாங்கத் தூண்டியது என்று இப்போது சரியாக நினைவில்லை. வாங்கி என் புத்தக அலமாரியில் படிக்க வேண்டும் என்ற வரிசையிலிருந்தது. இந்நாவலில் வரும் கதைப்பின்னணி கும்பகோணத்தில் பிறந்த எனக்கு மிக நெருக்கமான ஒன்றுதான். பள்ளிக்குச் செல்லும் போது காவேரி ஆற்றைக் கடந்து திரும்பும் ஒரு திருப்பத்தில் வேத பாட சாலை ஒன்று இருக்கும். அதன் பெரிய சுவருக்குப் பின்னால் பல சிறுவர்களும் என் வயதொத்த இளைஞர்களும் வேதங்களை வாய் விட்டுப் படித்து மனனம் செய்து கொண்டிருப்பார்கள். சைக்கிளில் அதைக் கடக்கும் போது அவர்கள் வாய்விட்டு வேதங்களைச் சொல்வது என் பள்ளிக்கூடத்தில் வாய்ப்பாடுகளை மனனம் செய்ய அனைவரும் அமர்ந்து ஒரே குரலில் சொல்வது நினைவ...

Comments
Post a Comment