Posts

Showing posts from August, 2023
  வெறியுறு வனப்பு சிறு வயதில் பள்ளி விடுமுறைகளின் போது திருச்சியிலிருந்த பெரியம்மாவின் வீட்டுக்குத்தான் பெரும்பாலும் செல்வோம். அதுதான் அப்போதைக்கு அப்பாவுக்கு அதிக செலவில்லாமல் இருந்தது, விடியற்காலையில் அவசரமாகப் படுக்கையிலிருந்து எழுப்பிவிடப்பட்டுக் குளித்து சோழன் ரயிலைப் பிடிக்க ரயில் நிலையத்திற்குள் நானும் என் அக்காவும் தள்ளிவிடப்படுவோம். அந்த நேரத்தில் ரயில் நிலையம் தூங்கி வழிந்துகொண்டிருக்கும். நிலையத்தை ஒட்டி வளர்ந்திருக்கும் ஆலமரங்களில் அடைந்திருக்கும் பறவைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும். நானும் அக்காவும் அங்கிருக்கும் ஏதோ ஒரு மூட்டையின் மீது அமர்ந்து, உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக் கொண்டிருப்போம். சிறிது நேரம் கழித்து விழித்துப் பார்க்கும் போது அங்கிருக்கும் ஆலமரங்கள் விலங்கு ஒன்று உயிர் பெற்றது போல பல்வேறு ஒலிகளுடன், பறவைகள் பறப்பதும் அமர்வதுமாகப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். அப்பா உறங்காமல் விழித்தே இருப்பார். அவருக்கு ரயிலில் பயணம் செய்வதென்பது மிகுந்த திட்டமிடலும் மெனக்கெடலும் கூடிய ஒரு சவாலான செயல். போய்ச் சேரும் வரை ஒரு பதைபதைப்புடன் இருப்பார். ரயில் வந்து, இருக்கைய