Posts

Showing posts from April, 2022

83

பஞ்சநாதன் அந்த மாதிரி ஒரு பந்தை ரமேஷிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ஒரு நிமிடம் உறைந்து பின்பு சுதாரித்து பின்னால் திரும்பிப் பார்த்தான். மண்ணில் புதைந்திருந்த மூன்று ஸ்டிக்குகளில் ஒன்று பந்து பட்டு கழுத்தைத் திருப்பிக்கொண்டிருந்தது. தன்னை "டேவிட் பூன்" என்று சொல்லிக்கொள்ளும் பஞ்சநாதன் ரமேஷ் போட்ட அந்த பந்தில் அவுட் ஆனது எங்கள் எல்லோருக்கும் வியப்பாக இருக்க நாங்கள் கை தட்டி பஞ்சநாதனைக் கிண்டல் செய்தோம். ஆனந்த் ஓடிச்சென்று ரமேஷை கட்டிப் பிடித்துக்கொண்டான். ரைஸ் மில் சந்தின் அருகில் பவுண்டரிக்கு செல்வதைத் தடுக்க நின்றுகொண்டிருந்த நான் ரமேஷிடம் ஓடி வந்து அவன் கையை தட்டினேன். வாசலிலிருந்த படிக்கட்டில் அமர்ந்து இதைப்பார்த்துக்கொண்டிருந்த ஆனந்த்தின் அம்மா "பஞ்சநாதா நீ 'டேவிட் பூன்' இல்ல 'டேவிட் கௌர்'. உலக கோப்பை போட்டியில அமர்நாத் போட்ட ஒரு பந்துல டேவிட் கௌரா இப்படி தான் அவுட் ஆனான். யாருமே எதிர்ப்பார்க்கல. அமர்நாத்கூட" என்று சொல்லி பலமாகச் சிரித்தாள். மாமி கிரிக்கெட் வெறியர். எங்களுடைய தெரு கிரிக்கெட்டிற்கு அவர்தான் அம்பயர். நான் 83 -ல் நடந்த உலகக்கோப்பை