Posts

Showing posts from July, 2021

கல்பொரு சிறுநுரை

  திரு.ஜெயமோகன் அவர்களின் தளத்திலிருந்து “கல்பொரு சிறுநுரை போல.." என்ற வரியின் அர்த்தமும், அதன் காட்சி வடிவமும் தெரிந்தவுடன் ஓயாமல் மனது இந்த வரியை முணுமுணுத்துக்கொண்டிருந்தது. ஒரு பெரும் ஆனந்தம் , பாறையின் மேல் மோதிய நுரையைப் போல மெல்ல வழிந்து ஒன்றுமில்லாமல் ஆவது என்ற கற்பனையின் ஊடாக மனம் ஏனோ கிருபா அண்ணனை இழுத்துவந்தது. எனக்கு கிருபா அண்ணன், மஞ்சரி அக்காவின் மூலமாகத் தான் தெரியும். ஜாங்கிரி செய்வதற்குக் கரண்டி எடுத்து வர மறந்த 'சமையல்' துரை மாமா, அவர் வீட்டுக்குச் சென்று வாங்கி வர அனுப்பியபோதுதான் மஞ்சரி அக்காவை முதலில் பார்த்தேன். மனம் முழுவதும் மாமா போட்டு வைத்திருந்த மைசூர் பாக்கையே நினைத்திருந்த பொழுதில், சட்டெனக் கதவு திறந்து மஞ்சரி அக்கா காட்சியளித்தாள். என் மனம் வார இதழ்களில் வரும் நடிகைகளால் நிறைந்திருந்த வயது அது. மஞ்சரி அக்கா எந்த சுடு சொல்லும் சொல்லாமல் அவர்கள் அனைவரையும் வெளியேற்றினாள். ஜாங்கிரி கரண்டியைக் கொண்டுவந்து கொடுத்த அவளிடம், ஜாங்கிரி சுடுவதற்குத் தேவையான எந்த சிறப்பம்சமும் அந்த கரண்டியில் இல்லாத அதிர்ச்சியில் அவள் முகத்தை நான் பார்க்க, "இதுதா