Posts

Showing posts from June, 2023
  யாருமற்ற வீட்டில் மலர்ந்திருக்கிறது ரத்தம் ஒழுகும் பாவனையில் செம்பருத்தி ஒன்று அத்துமீறி உள் நுழைந்து அனைத்தையும் கலைத்துவிட்டுப் போகிறது வெயில் முணுமுணுக்கின்றன புறவாசலில் தொங்கும் மணிகள் யாரையோ எதிர்பார்த்து கண்ணாடியில் முட்டி செல்கிறது அந்த குருவி சோகத்தின் படிமமாகித் துவண்டு தொங்குகின்றன திரைச்சீலைகள் யாரேனும் ஒருவர் தன்னை மரிக்கச் செய்வார்கள் என்று காத்திருக்கிறது தனிமை அனைத்தையும் அறிந்து சிறு அதிர்வில் நகர்ந்து கொண்டேயிருக்கிறது காலம்.
Image
  திரு.எஸ். ராமகிருஷ்ணனின் பயணக்கட்டுரைகள் எனக்கு பிடித்தமான ஒன்று. அது ஏற்படுத்திய தாக்கத்தில் நானும் எழுத முயன்று, அது எவ்வளவு சவாலான ஒன்று என்பதை உணர்ந்து பாதியிலேயே நிறுத்திவிட்டேன். மிக முக்கியமான தடையாக எனக்கு இருந்தது, பயணத்துக்குப் பின்பு, மன நிலையை முன்பிருந்த உணர்வு புள்ளிக்கு நகர்த்தி அதே வியப்பை, பேரானந்தத்தை, கொந்தளிப்பை மீட்டெடுப்பது. மனம் அந்த தருணத்தில் அனைத்தையும் அடைந்து வேறு நிலைக்கு மாறிவிட்டதுபோல ஒரு உணர்வு வந்து வெறுமையை அடைந்திருக்கும். இரவில் ஒரு பெருங்கனவில் திளைத்திருந்த மனம் காலை எழுந்தபின்பு அத்தனையும் மறந்துவிடும் தருணம் போல.   சிறுகதைக்கான ஒரு கரு/உணர்வு வந்தவுடன் பெரும்பாலும் அதனை மனதில் நிகழ்த்திப்பார்க்காமல் எழுதும்போது என்ன வருகிறதோ அதனை எழுத வேண்டும் என்று திரு.ஜெ ஒரு முறை சொல்லியிருந்தார். அது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு ஒரு மனப்பயிற்சி தேவைப்படுகிறது.  நண்பர் பாலாஜியின் கரூர் டைரிஸ் கட்டுரைகள் படித்தேன். முதல் நான்கு பகுதிகள் நிறையக் குறிப்புகளுடன் நகர்ந்துகொண்டிருந்தன. தனியாக நீண்ட விமானப் பயணம் என்பது எப்போதாவது எனக்கு நிகழ்வது. ஒரு மச்சம் போல என்