Posts

Showing posts from April, 2024

ஒரு புளியமரத்தின் கதை - ரசனையுரை

Image
திரு. சுந்தர ராமசாமியின் படைப்புகள் பற்றிய அறிமுகம் திரு.ஜெயமோகன் அவர்கள் வழியாகவே எனக்குக் கிடைத்தது. நவீனத் தமிழ் இலக்கியத்தில் தன்னுடைய அணுக்கமான ஆசிரியர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி என்று மிக உயர்ந்த இடத்தில் ஜெயமோகன் வைத்திருப்பதின் மூலம் சுந்தர ராமசாமியின் அறிவார்ந்த இலக்கிய திறனும் அதில் அவருடைய பெரும் பங்கும் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் எனக்குச் சுந்தர ராமசாமியின் அவர்களின் படைப்புகளை எங்கிருந்து தொடங்குவது என்ற ஒரு தயக்கம் இருந்தது. அதற்கு முதல் காரணம் என் நவீனத் தமிழ் இலக்கிய வாசிப்பு ஜெயமோகனிலிருந்து தொடங்கி அவரின் வழிகாட்டுதலின் மூலம் பின்னோக்கி நகர்ந்து பல இலக்கிய ஆளுமைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் பெரும் மனத்தடங்களாக எனக்கு இருந்தது, அவ்வாசிரியர்கள் பயன்படுத்தியிருக்கும் கவித்தன்மையும் உருவகங்களும் இன்று தேய் வழக்காகி நவீனத்தன்மையற்ற தன்மை ஒன்று இருப்பது போல இருந்ததால் அதில் மனம் ஒத்துப் படிக்கச் சற்று சிரமமாக இருந்தது. அதன் யதார்த்தம் புரிந்தாலும் ஏனோ மனம் ஒன்றி படிக்க இயலவில்லை. ஆனாலும் அவைகளையும் மீறி அவர்களின் படைப்புகளிலிருந்த வாழ்க்கையனுபவமும் இலக்கிய உன்னத