Posts

Showing posts from May, 2022

டல்லாஸ், டெக்ஸாஸ் வாசகர் சந்திப்பு – கடிதம்

அன்புள்ள ஜெ, நலமா? உங்களையும் திருமதி. அருண்மொழி நங்கை அவர்களையும் டெக்ஸாஸ் மாநிலம் டல்லாஸில் நடந்த வாசகர் சந்திப்பில் சந்தித்து உரையாடியது மிக்க மகிழ்ச்சியையும், மன உத்வேகத்தையும் அளித்திருக்கிறது. பூன் முகாம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அப்போதிருந்த மனநிலையில் என்னால் அங்கு முழு ஈடுபாட்டுடன் செயல்படமுடியாமல் போகும் என்பதால் அப்போது பதிவு செய்யவில்லை. பூன் முகாமில் கலந்துகொண்ட நண்பர் திரு.ஜெகதீஷிடம் பேசியதிலிருந்தும், அது தொடர்பான கடிதங்களைப் பார்க்கும் போதும் அந்நிகழ்வு நான் எதிர்பார்த்தது போல மிகச் சிறப்பான ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது மகிழ்ச்சி. டல்லாஸில் நடக்கும் வாசகர் சந்திப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து முதல் நாளே அங்கு வந்திருந்தேன். நிகழ்ச்சி நடக்கும் அன்று டல்லாஸிலிருந்த நூலகத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே நானும் என் நண்பன் திரு.சிவா துரையும் வந்து காத்திருந்தோம். அன்று காலையிலிருந்தே ஏதோ ஒரு பதட்டம் இருந்தது. சொல்லுக்குண்டான அர்த்தம் தெரிந்தவுடன் மனம் அதனை விரித்துப்பார்ப்பதுபோல, அந்த

உணரும் தருணம்

Image
என் அம்மா வழி தாத்தா அவரின் இளம் வயதில் மிகுந்த கூச்ச சுபாவத்துடனும், பயத்துடன் இருந்தார் என்றும், பாட்டியைத் திருமணம் செய்த பின் அவர் வேறு ஒரு ஆளாக மாறி பலபேருக்குப் பிடித்துப்போன ஒருவராகி வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்று செல்வந்தர் ஆனதைக் கதையாக என் மற்றொரு பாட்டி என் சிறுவயதில் சொல்லுவார். அதற்குக் காரணம் அவரை மணந்துகொண்ட பாட்டிதான் என்றும், "அவ கையில மந்திரம்ல வச்சிருந்தா" என்று சொல்லும்போது நான் உண்மையிலேயே என் பாட்டியை ஒரு மந்திரவாதியாகவே நினைத்து  அவளின் கை நீண்டு தாத்தாவின் கையை எப்போதும் பிடித்துக்கொண்டிருப்பது போலவே என் சிறுவயதில் கற்பனை செய்து வைத்திருந்தேன்.  பின்பு என் இளம்வயதில் அந்த கற்பனையை மீள் செய்யும் போது, அன்று பாட்டியை "மந்திரவாதி" என்று சொன்னது ஒரு வார்த்தை பதம் என்றும் அவள் "கையில்" என்ன இருக்கப்போகிறது என்று உணர்ந்து சிரித்திருக்கிறேன். மே மாதம் 17 ம் தேதி, டெக்ஸாஸ் மாகாணம் டல்லாஸில் திரு.ஜெயமோகன் அவர்களை முதன் முதலில் பார்த்து கை குலுக்கும் போது அந்த "மந்திரவாதி" தன்மையைச் சட்டென உணர்ந்தேன். தொடர் வாசிப்புகள் வழியே மட்ட

நினைவில் காடுள்ள மிருகம்

யானையும், ரயிலும் ஏனோ எந்த வயதிலும் அலுப்புத்தட்டுவதேயில்லை. அதிலும் யானையின் உடலசைவுகள் ஏனோ மனதுக்குள் குதூகலம் ஒன்றைச் சட்டென ஏற்படுத்திவிடுகிறது. தினசரி கவலைகளில் திரிந்த மனம் அனைத்தையும் உதறி ஒரு புள்ளியில் குவிந்து இலகுவாகிவிடுகிறது. தெருவில் யானை செல்லும்போது உறைந்து சலனமற்று நிற்பவர்களில் பெரும்பாலானோர் நாற்பது வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள். ஏனோ அந்த பிரம்மாண்டத்தினுள் இருக்கும் சிறு குழந்தைத்தனம் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கடந்தவர்களுக்கு ஒரு ரகசியத்தைச் சொல்கிறது போலும். கோவில்கள் நிறைந்த எங்களூரில் அப்போதெல்லாம் ஒவ்வொரு கோவிலிலும் ஒரு யானை நின்றுகொண்டிருக்கும்.பெரும்பாலும் பாகனுக்காக இரந்து கொண்டிருக்கும் அதனை அவ்வளவு எளிதில் என்னால் கடந்துசெல்ல முடியாது. சிறிது நேரம் நின்று அதன் அசைவுகளையே பார்த்துக்கொண்டிருப்பேன். வெளியுலகத்துக்கு நன்கு பழக்கப்பட்ட அவைகள் பெரும்பாலும் சாதுவாகத் தும்பிக்கையால் "புஸ்..புஸ்" எனத் தரையில் எதையோ துழாவிக்கொண்டும், காலை முன்னும் பின்னும் மாற்றி வைத்துச் சிறு நடனம் ஒன்றை நிகழ்த்திக்கொண்டும் இருக்கும். நான் யானையை நின்று ரசிக்கக் க