Posts

Showing posts from January, 2024

கோபல்ல கிராமம் - ரசனையுரை

Image
திரு கி.ராஜநாராயணன் அவர்கள் எழுதிய கோபல்ல கிராமம் என்ற நாவலைச் சமீபத்தில் படித்தேன். அது பற்றிய என் பார்வை. கோவில்பட்டிக்கு அருகே கோபல்ல என்ற கிராமத்தில் நடக்கும் இக்கதை பாளையப்பட்டுகள் தங்கள் அரசை இழந்து வெள்ளையர்கள் (கும்பினி) ஆட்சி அதிகாரம் செலுத்த ஆரம்பிக்கும் முன் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் செல்வச் செழிப்பாக வாழ்ந்த கோட்டையார் குடும்பம், ஊரில் தன் குடும்பத்துக்கே உரிய மரியாதையையும், கௌரவத்தையும் மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் இழந்து இருந்தது அப்போது. ஊரில் நடக்கும் அனைத்துப் பஞ்சாயத்துகளும் கோட்டையார் குடும்பத் தலைமையில் தான் நடக்கிறது. அக்குடும்பத்தில் மொத்தம் அண்ணன் தம்பிகள் ஏழு பேர். குடும்பம் சார்ந்து இருக்கும் வேலைகளை ஒவ்வொருவரும் ஓர் இலாகாவைப் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்களைத் தவிர அக்கையா என்பவரும் அக்குடும்பத்திலேயே சிறு வயதிலிருந்து அங்கேயே அவர்களுடன் வாழ்கிறார். அதோடு ஊர்குடும்பன் என்ற மற்றொருவர் எடுபிடியாக அங்கே இருக்கிறார். இவர்களுடன் நூத்தி முப்பத்தேழு வயதில் பூட்டி மங்கத்தாயாரு அம்மாளும் படுத்த படுக்கையாக இருக்கிறார். இக்கதை அவ்வூரின் ஊருணியி