Posts

Showing posts from June, 2021

சஞ்சாரம்

Image
  என் சிறுவயது முதலே நாதஸ்வர இசையைக் கடந்து வந்திருக்கிறேன். இருந்தாலும் அந்த இசையின் இனிமையோ தாக்கமோ என் கடந்த கால நினைவின் எந்த பகுதியிலும் தங்கவே இல்லை. இத்தனைக்கும் மழைக்கு ஒதுங்கப் பள்ளிகளை விடக் கோவில்கள் நிறைந்த எங்களூரில் நாதஸ்வரம் வாசிக்கப்படுவது என்பது அரிதான நிகழ்வு அல்ல. எந்த கோவிலுக்குச் சென்றாலும் நாதஸ்வரமும், மேளமும் வாசித்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால் பெரும்பாலும் அவர்கள் மண்டபத்தின் இருள் அடர்ந்த ஒரு மூலையில் கருங்கல் தூண்களில் ஒலி அதிர வாசித்துகொண்டிருப்பார்கள். மீதமிருக்கும் விபூதியைக் கொட்டத் தூணைத் தேடும் தருணத்தில் மட்டுமே அவர்கள் கண்டுகொள்ளப்படுவார்கள். திருமண நிகழ்வின் போதும் கூட, கெட்டிமேளம் அடிக்கும் அந்த சில நொடிகள் மட்டும் அவர்களின் இருப்பு அனைவருக்கும் புலப்பட்டு முக்கியப்படுத்தப்படும். இசையறிவு அல்லது இசை ஞானம் என்பதைத் திரையிசை ஒன்றையே அளவுகோலாக வைத்து மதிப்பீடு செய்யும் பெரும்பாலானவர்களுக்கு, இசையின் வேறு ஒரு தளத்தில் இருப்பவர்களின் பெருமையே தெரிவதில்லை. இப்படி ஒரு பொதுப் புத்தியில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு திரு. எஸ்.ரா எழுதிய இந்த 'சஞ்ச