Posts

  இலைகளை வெறுக்கும் மரங்கள் ------------------------------- நேற்று இரவு முழுவதும் அடித்த காற்றில் எதிர்வீட்டிலிருந்த மார்ஷாவின் தோட்டத்தில் வைத்திருந்த காற்றாடி அங்குமிங்கும் திரும்பிச் சுழலும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. காலையில் விழித்தபொழுது சுழற்றி அடிக்கும் மிகப் பெரிய காற்றாடி ஒன்றின் பிடியிலிருந்து மீண்டுவந்த கனவின் உணர்வுமட்டுமிருந்தது. படுக்கையிலிருந்து எழுந்து வெளியே சென்று பார்க்க நினைத்தாலும், போர்வையின் கதகதப்பிலிருந்து வெளிவர மனமில்லாமல் அப்படியே கிடந்தேன். ஆனால், எண்ணங்கள் அனைத்தும் வெளியே உலாவிக்கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து வெளியே சென்று பார்த்தேன். சற்று குளிராக இருந்தது. வரிசையாக நின்றுகொண்டிருந்த மரங்களிலிருந்து தொடர்ச்சியாக இலைகள் விழும் இயக்கத்தைத் தவிர அனைத்தும் அக்குளிரில் உறைந்திருந்தன. சாலையெங்கும் நிரம்பியிருந்த சிவந்த இலைகள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு துண்டுகளென எங்கும் பரவியிருந்தன. சிறிது நேரம் அக்குளிரிலேயே நின்றிருந்தேன். இலையுதிர் காலம் தொடங்கியவுடன் மனதுக்குள் மெல்ல ஒரு சோகமும் வந்துவிடுகிறது. ஏனோ அதற்கு எந்த வித காரணமும் இருப்பதுமில...

The Old Man and the Sea - Ernest Hemingway

Image
சமீபத்தில் என் குடும்பத்துடன் ப்ளோரிடா மாகாணத்தில் தென் மேற்கே இருக்கும் கீ வெஸ்ட் (Key West) என்ற பல தீவுகள் அடங்கிய இடத்திற்குச் செல்ல முடிவெடுத்திருந்தோம். அங்குச் செல்ல வேண்டிய முக்கியமான இடங்களை என் மனைவியிடம் பார்க்கச் சொல்லியிருந்தேன். நான் சொன்னது போலவே அவளும் ஆராய்ந்து ஒரு சில இடங்களைக் குறித்துக்கொண்டு என்னிடம் கொடுத்தாள். அதில் ஒரு இடம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அது அமெரிக்காவின் தலை சிறந்த இலக்கிய எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) வாழ்ந்த வீடு கீ வெஸ்டில் இருந்தது. பார்த்தவுடன் மனதுக்குள் ஏனோ ஒரு குதூகலம் வந்து தொற்றிக்கொண்டது. நான் இதுபற்றி என் மகளிடம் சொல்ல அவளும் உற்சாகமானாள். இதுவரை அவர் எழுதிய எந்த புத்தகத்தையும் நானோ என் மகளோ படித்ததில்லை. ஆனால் தமிழின் சிறந்த இலக்கிய எழுத்தாளர்கள் அசோகமித்திரன், நகுலன் அவர்களின் உரையாடல் ஒன்றில் எர்னஸ்ட் ஹெமிங்வே புத்தகங்கள் பற்றிப் பேசியிருந்தது நினைவிருக்கிறது. அடுத்த நாளே என் மகள் என் வீட்டின் அருகில் இருக்கும் நூலகத்திலிருந்து எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய "The Old Man and the Sea" என்ற ஒரு நாவலை எடுத்து கொண்ட...

டல்லாஸ், டெக்ஸாஸ் வாசகர் சந்திப்பு – கடிதம்

அன்புள்ள ஜெ, நலமா? உங்களையும் திருமதி. அருண்மொழி நங்கை அவர்களையும் டெக்ஸாஸ் மாநிலம் டல்லாஸில் நடந்த வாசகர் சந்திப்பில் சந்தித்து உரையாடியது மிக்க மகிழ்ச்சியையும், மன உத்வேகத்தையும் அளித்திருக்கிறது. பூன் முகாம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அப்போதிருந்த மனநிலையில் என்னால் அங்கு முழு ஈடுபாட்டுடன் செயல்படமுடியாமல் போகும் என்பதால் அப்போது பதிவு செய்யவில்லை. பூன் முகாமில் கலந்துகொண்ட நண்பர் திரு.ஜெகதீஷிடம் பேசியதிலிருந்தும், அது தொடர்பான கடிதங்களைப் பார்க்கும் போதும் அந்நிகழ்வு நான் எதிர்பார்த்தது போல மிகச் சிறப்பான ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது மகிழ்ச்சி. டல்லாஸில் நடக்கும் வாசகர் சந்திப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து முதல் நாளே அங்கு வந்திருந்தேன். நிகழ்ச்சி நடக்கும் அன்று டல்லாஸிலிருந்த நூலகத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே நானும் என் நண்பன் திரு.சிவா துரையும் வந்து காத்திருந்தோம். அன்று காலையிலிருந்தே ஏதோ ஒரு பதட்டம் இருந்தது. சொல்லுக்குண்டான அர்த்தம் தெரிந்தவுடன் மனம் அதனை விரித்துப்பார்ப்பதுபோல, அந்த ...

உணரும் தருணம்

Image
என் அம்மா வழி தாத்தா அவரின் இளம் வயதில் மிகுந்த கூச்ச சுபாவத்துடனும், பயத்துடன் இருந்தார் என்றும், பாட்டியைத் திருமணம் செய்த பின் அவர் வேறு ஒரு ஆளாக மாறி பலபேருக்குப் பிடித்துப்போன ஒருவராகி வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்று செல்வந்தர் ஆனதைக் கதையாக என் மற்றொரு பாட்டி என் சிறுவயதில் சொல்லுவார். அதற்குக் காரணம் அவரை மணந்துகொண்ட பாட்டிதான் என்றும், "அவ கையில மந்திரம்ல வச்சிருந்தா" என்று சொல்லும்போது நான் உண்மையிலேயே என் பாட்டியை ஒரு மந்திரவாதியாகவே நினைத்து  அவளின் கை நீண்டு தாத்தாவின் கையை எப்போதும் பிடித்துக்கொண்டிருப்பது போலவே என் சிறுவயதில் கற்பனை செய்து வைத்திருந்தேன்.  பின்பு என் இளம்வயதில் அந்த கற்பனையை மீள் செய்யும் போது, அன்று பாட்டியை "மந்திரவாதி" என்று சொன்னது ஒரு வார்த்தை பதம் என்றும் அவள் "கையில்" என்ன இருக்கப்போகிறது என்று உணர்ந்து சிரித்திருக்கிறேன். மே மாதம் 17 ம் தேதி, டெக்ஸாஸ் மாகாணம் டல்லாஸில் திரு.ஜெயமோகன் அவர்களை முதன் முதலில் பார்த்து கை குலுக்கும் போது அந்த "மந்திரவாதி" தன்மையைச் சட்டென உணர்ந்தேன். தொடர் வாசிப்புகள் வழியே மட்ட...

நினைவில் காடுள்ள மிருகம்

யானையும், ரயிலும் ஏனோ எந்த வயதிலும் அலுப்புத்தட்டுவதேயில்லை. அதிலும் யானையின் உடலசைவுகள் ஏனோ மனதுக்குள் குதூகலம் ஒன்றைச் சட்டென ஏற்படுத்திவிடுகிறது. தினசரி கவலைகளில் திரிந்த மனம் அனைத்தையும் உதறி ஒரு புள்ளியில் குவிந்து இலகுவாகிவிடுகிறது. தெருவில் யானை செல்லும்போது உறைந்து சலனமற்று நிற்பவர்களில் பெரும்பாலானோர் நாற்பது வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள். ஏனோ அந்த பிரம்மாண்டத்தினுள் இருக்கும் சிறு குழந்தைத்தனம் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கடந்தவர்களுக்கு ஒரு ரகசியத்தைச் சொல்கிறது போலும். கோவில்கள் நிறைந்த எங்களூரில் அப்போதெல்லாம் ஒவ்வொரு கோவிலிலும் ஒரு யானை நின்றுகொண்டிருக்கும்.பெரும்பாலும் பாகனுக்காக இரந்து கொண்டிருக்கும் அதனை அவ்வளவு எளிதில் என்னால் கடந்துசெல்ல முடியாது. சிறிது நேரம் நின்று அதன் அசைவுகளையே பார்த்துக்கொண்டிருப்பேன். வெளியுலகத்துக்கு நன்கு பழக்கப்பட்ட அவைகள் பெரும்பாலும் சாதுவாகத் தும்பிக்கையால் "புஸ்..புஸ்" எனத் தரையில் எதையோ துழாவிக்கொண்டும், காலை முன்னும் பின்னும் மாற்றி வைத்துச் சிறு நடனம் ஒன்றை நிகழ்த்திக்கொண்டும் இருக்கும். நான் யானையை நின்று ரசிக்கக் க...

83

பஞ்சநாதன் அந்த மாதிரி ஒரு பந்தை ரமேஷிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ஒரு நிமிடம் உறைந்து பின்பு சுதாரித்து பின்னால் திரும்பிப் பார்த்தான். மண்ணில் புதைந்திருந்த மூன்று ஸ்டிக்குகளில் ஒன்று பந்து பட்டு கழுத்தைத் திருப்பிக்கொண்டிருந்தது. தன்னை "டேவிட் பூன்" என்று சொல்லிக்கொள்ளும் பஞ்சநாதன் ரமேஷ் போட்ட அந்த பந்தில் அவுட் ஆனது எங்கள் எல்லோருக்கும் வியப்பாக இருக்க நாங்கள் கை தட்டி பஞ்சநாதனைக் கிண்டல் செய்தோம். ஆனந்த் ஓடிச்சென்று ரமேஷை கட்டிப் பிடித்துக்கொண்டான். ரைஸ் மில் சந்தின் அருகில் பவுண்டரிக்கு செல்வதைத் தடுக்க நின்றுகொண்டிருந்த நான் ரமேஷிடம் ஓடி வந்து அவன் கையை தட்டினேன். வாசலிலிருந்த படிக்கட்டில் அமர்ந்து இதைப்பார்த்துக்கொண்டிருந்த ஆனந்த்தின் அம்மா "பஞ்சநாதா நீ 'டேவிட் பூன்' இல்ல 'டேவிட் கௌர்'. உலக கோப்பை போட்டியில அமர்நாத் போட்ட ஒரு பந்துல டேவிட் கௌரா இப்படி தான் அவுட் ஆனான். யாருமே எதிர்ப்பார்க்கல. அமர்நாத்கூட" என்று சொல்லி பலமாகச் சிரித்தாள். மாமி கிரிக்கெட் வெறியர். எங்களுடைய தெரு கிரிக்கெட்டிற்கு அவர்தான் அம்பயர். நான் 83 -ல் நடந்த உலகக்கோப்பை ...

நிலம் பூத்து மலர்ந்த நாள்

  பள்ளியில் படித்த தமிழ்ச் சங்க பாடல்கள் மிகுந்த அயர்ச்சியைத் தரக்கூடியதாகவே இருந்தது. அதற்கு பெரும் காரணம் என்று இன்று நான் நினைப்பது பள்ளியைத் தவிர வேறு எங்கும் அந்தப் பாடல்களைக் கேட்க இயலாது போனதும், குறைந்தபட்சம் அதன் வார்த்தை உபயோகங்கள் பொதுவில் இல்லாமல் போனதும். மேலும் இதன் அழகியலையும், நுண்ணுணர்வுகளையும் புரிந்துகொள்ள ஒரு குறிப்பிட்ட வயதினை கடந்து, வாழ்க்கையின் சில அனுபவங்களை அடைய வேண்டியதாகிறது. தலைவனைப் பிரிந்த தலைவி பசலையால் வாடினாள் என்பதை அப்போது எட்டாம் வகுப்பு படித்த என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அகநானூறும், புறநானூறும் பொருளாதாரத்தை உயர்த்த எங்கும் பயன்படப்போவதில்லை எனும்போது வாழ்க்கையில் இதன் தேவையென்ன என்ற கேள்வி எழாமல் இல்லை. புற வாழ்க்கையின் தேவையை மட்டுமே சரிசெய்யும் பொருளாதாரம், எந்த விதத்திலும் நம் ஈராயிரம் ஆண்டு பண்பாட்டை ஒரு போதும் பாதிக்காமல் இருப்பதைப் புரிந்துகொள்வதற்கு இவை உதவிசெய்கின்றன என்றே எண்ணுகிறேன். திரு. மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதிய "நிலம் பூத்து மலர்ந நாள்" நாவலைத் தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ "நிலம் பூத்து மலர்ந்த நாள்" என்...