Posts

83

பஞ்சநாதன் அந்த மாதிரி ஒரு பந்தை ரமேஷிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ஒரு நிமிடம் உறைந்து பின்பு சுதாரித்து பின்னால் திரும்பிப் பார்த்தான். மண்ணில் புதைந்திருந்த மூன்று ஸ்டிக்குகளில் ஒன்று பந்து பட்டு கழுத்தைத் திருப்பிக்கொண்டிருந்தது. தன்னை "டேவிட் பூன்" என்று சொல்லிக்கொள்ளும் பஞ்சநாதன் ரமேஷ் போட்ட அந்த பந்தில் அவுட் ஆனது எங்கள் எல்லோருக்கும் வியப்பாக இருக்க நாங்கள் கை தட்டி பஞ்சநாதனைக் கிண்டல் செய்தோம். ஆனந்த் ஓடிச்சென்று ரமேஷை கட்டிப் பிடித்துக்கொண்டான். ரைஸ் மில் சந்தின் அருகில் பவுண்டரிக்கு செல்வதைத் தடுக்க நின்றுகொண்டிருந்த நான் ரமேஷிடம் ஓடி வந்து அவன் கையை தட்டினேன். வாசலிலிருந்த படிக்கட்டில் அமர்ந்து இதைப்பார்த்துக்கொண்டிருந்த ஆனந்த்தின் அம்மா "பஞ்சநாதா நீ 'டேவிட் பூன்' இல்ல 'டேவிட் கௌர்'. உலக கோப்பை போட்டியில அமர்நாத் போட்ட ஒரு பந்துல டேவிட் கௌரா இப்படி தான் அவுட் ஆனான். யாருமே எதிர்ப்பார்க்கல. அமர்நாத்கூட" என்று சொல்லி பலமாகச் சிரித்தாள். மாமி கிரிக்கெட் வெறியர். எங்களுடைய தெரு கிரிக்கெட்டிற்கு அவர்தான் அம்பயர். நான் 83 -ல் நடந்த உலகக்கோப்பை ...

நிலம் பூத்து மலர்ந்த நாள்

  பள்ளியில் படித்த தமிழ்ச் சங்க பாடல்கள் மிகுந்த அயர்ச்சியைத் தரக்கூடியதாகவே இருந்தது. அதற்கு பெரும் காரணம் என்று இன்று நான் நினைப்பது பள்ளியைத் தவிர வேறு எங்கும் அந்தப் பாடல்களைக் கேட்க இயலாது போனதும், குறைந்தபட்சம் அதன் வார்த்தை உபயோகங்கள் பொதுவில் இல்லாமல் போனதும். மேலும் இதன் அழகியலையும், நுண்ணுணர்வுகளையும் புரிந்துகொள்ள ஒரு குறிப்பிட்ட வயதினை கடந்து, வாழ்க்கையின் சில அனுபவங்களை அடைய வேண்டியதாகிறது. தலைவனைப் பிரிந்த தலைவி பசலையால் வாடினாள் என்பதை அப்போது எட்டாம் வகுப்பு படித்த என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அகநானூறும், புறநானூறும் பொருளாதாரத்தை உயர்த்த எங்கும் பயன்படப்போவதில்லை எனும்போது வாழ்க்கையில் இதன் தேவையென்ன என்ற கேள்வி எழாமல் இல்லை. புற வாழ்க்கையின் தேவையை மட்டுமே சரிசெய்யும் பொருளாதாரம், எந்த விதத்திலும் நம் ஈராயிரம் ஆண்டு பண்பாட்டை ஒரு போதும் பாதிக்காமல் இருப்பதைப் புரிந்துகொள்வதற்கு இவை உதவிசெய்கின்றன என்றே எண்ணுகிறேன். திரு. மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதிய "நிலம் பூத்து மலர்ந நாள்" நாவலைத் தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ "நிலம் பூத்து மலர்ந்த நாள்" என்...

இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே

  மிகைப்படுத்தப்பட்ட அரசியல் அலறல் செய்திகளின் இடையே, தன் ஒரே மகள் இறந்த துக்கம் தாளாமல் அப்பெண்ணின் பெற்றோர்கள் கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக ஒரு செய்தியைப் படித்தேன். வெறும் சொற்களால் மட்டும் கட்டமைக்கப்படாமல் அச்செய்தியுடன் இணைத்திருந்த அந்த புகைப்படத்தில், அப்பெண் இருபக்கமும் நின்றிருந்த தன் பெற்றோர்களின் தோளில் கை போட்டபடி சிரித்துக் கொண்டிருந்தாள். அச்செய்தியை முன் தள்ளி நகர்ந்திருந்தாலும், ஏனோ என் மனம் மட்டும் அங்கேயே நின்றிருந்தது. புகைப்படத்தில் அப்பெண்ணின் கண்களிலிருந்த துள்ளலான சிரிப்பும், அப்பெற்றோர்களின் பெருமிதமான தோரணையும் நினைவிலிருந்து மீள் செய்யும் தோறும் என் அலுவல் இயக்கங்கள் முழுவதும் இழுபட்டுக்கொண்டே இருந்தது. அப்புகைப்படம் அவர்கள் மூவரும் மகிழ்ச்சியாக இருந்த ஒரு தருணத்தை உறையச்செய்திருந்தது. அதுவரை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் அப்புகைப்படம் முக்கியமான ஒரு மைல்கல்லாக, எத்தனையோ நினைவுகளை அது தாங்கி நின்றிருக்கும். அப்பெண் இல்லா அவள் வீட்டில் அவளின் நினைவுகள் எங்கும் சிதறடிக்கப்பட்டு, சிறு பொருள்கள் கூட அவள் இல்லா இருப்பை உருப்பெருக்கி காட்டியிர...

கல்பொரு சிறுநுரை

  திரு.ஜெயமோகன் அவர்களின் தளத்திலிருந்து “கல்பொரு சிறுநுரை போல.." என்ற வரியின் அர்த்தமும், அதன் காட்சி வடிவமும் தெரிந்தவுடன் ஓயாமல் மனது இந்த வரியை முணுமுணுத்துக்கொண்டிருந்தது. ஒரு பெரும் ஆனந்தம் , பாறையின் மேல் மோதிய நுரையைப் போல மெல்ல வழிந்து ஒன்றுமில்லாமல் ஆவது என்ற கற்பனையின் ஊடாக மனம் ஏனோ கிருபா அண்ணனை இழுத்துவந்தது. எனக்கு கிருபா அண்ணன், மஞ்சரி அக்காவின் மூலமாகத் தான் தெரியும். ஜாங்கிரி செய்வதற்குக் கரண்டி எடுத்து வர மறந்த 'சமையல்' துரை மாமா, அவர் வீட்டுக்குச் சென்று வாங்கி வர அனுப்பியபோதுதான் மஞ்சரி அக்காவை முதலில் பார்த்தேன். மனம் முழுவதும் மாமா போட்டு வைத்திருந்த மைசூர் பாக்கையே நினைத்திருந்த பொழுதில், சட்டெனக் கதவு திறந்து மஞ்சரி அக்கா காட்சியளித்தாள். என் மனம் வார இதழ்களில் வரும் நடிகைகளால் நிறைந்திருந்த வயது அது. மஞ்சரி அக்கா எந்த சுடு சொல்லும் சொல்லாமல் அவர்கள் அனைவரையும் வெளியேற்றினாள். ஜாங்கிரி கரண்டியைக் கொண்டுவந்து கொடுத்த அவளிடம், ஜாங்கிரி சுடுவதற்குத் தேவையான எந்த சிறப்பம்சமும் அந்த கரண்டியில் இல்லாத அதிர்ச்சியில் அவள் முகத்தை நான் பார்க்க, "இதுதா...

சஞ்சாரம்

Image
  என் சிறுவயது முதலே நாதஸ்வர இசையைக் கடந்து வந்திருக்கிறேன். இருந்தாலும் அந்த இசையின் இனிமையோ தாக்கமோ என் கடந்த கால நினைவின் எந்த பகுதியிலும் தங்கவே இல்லை. இத்தனைக்கும் மழைக்கு ஒதுங்கப் பள்ளிகளை விடக் கோவில்கள் நிறைந்த எங்களூரில் நாதஸ்வரம் வாசிக்கப்படுவது என்பது அரிதான நிகழ்வு அல்ல. எந்த கோவிலுக்குச் சென்றாலும் நாதஸ்வரமும், மேளமும் வாசித்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால் பெரும்பாலும் அவர்கள் மண்டபத்தின் இருள் அடர்ந்த ஒரு மூலையில் கருங்கல் தூண்களில் ஒலி அதிர வாசித்துகொண்டிருப்பார்கள். மீதமிருக்கும் விபூதியைக் கொட்டத் தூணைத் தேடும் தருணத்தில் மட்டுமே அவர்கள் கண்டுகொள்ளப்படுவார்கள். திருமண நிகழ்வின் போதும் கூட, கெட்டிமேளம் அடிக்கும் அந்த சில நொடிகள் மட்டும் அவர்களின் இருப்பு அனைவருக்கும் புலப்பட்டு முக்கியப்படுத்தப்படும். இசையறிவு அல்லது இசை ஞானம் என்பதைத் திரையிசை ஒன்றையே அளவுகோலாக வைத்து மதிப்பீடு செய்யும் பெரும்பாலானவர்களுக்கு, இசையின் வேறு ஒரு தளத்தில் இருப்பவர்களின் பெருமையே தெரிவதில்லை. இப்படி ஒரு பொதுப் புத்தியில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு திரு. எஸ்.ரா எழுதிய இந்த 'சஞ்ச...