யாருமற்ற வீட்டில்மலர்ந்திருக்கிறது ரத்தம் ஒழுகும் பாவனையில் செம்பருத்தி ஒன்று

அத்துமீறி உள் நுழைந்து அனைத்தையும் கலைத்துவிட்டுப் போகிறது வெயில்
முணுமுணுக்கின்றன புறவாசலில் தொங்கும் மணிகள்
யாரையோ எதிர்பார்த்து கண்ணாடியில் முட்டி செல்கிறது அந்த குருவி
சோகத்தின் படிமமாகித் துவண்டு தொங்குகின்றன திரைச்சீலைகள்
யாரேனும் ஒருவர் தன்னை மரிக்கச் செய்வார்கள் என்று காத்திருக்கிறது தனிமை
அனைத்தையும் அறிந்து சிறு அதிர்வில் நகர்ந்து கொண்டேயிருக்கிறது காலம்.

Comments

Popular posts from this blog

அம்மா வந்தாள் - தி ஜானகிராமன் - ரசனையுரை

சிறுமைகளும் அவமதிப்புகளும் - பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி

அஞ்சலை - கண்மணி குணசேகரன் - ரசனையுறை