அன்று மிரண்டு நிலைத்த விழிகளில் ஈக்கள் நிறைந்த மான் ஒன்று
பின்பு அடையாளத்துக்கு வால் மட்டும் எஞ்சிய அணில்
நேற்று பரமபத பாம்பு என
வெளிறிய சிமெண்ட் சாலையுடன் பதிந்திருந்த அவைகளை
என் வாகனத்தின் சக்கரங்களின் இடையில் கடத்தி என்
இரக்க குணத்தை தக்கவைத்துக்கொண்டிருந்தேன்.
இன்று அப்படியில்லை
என் மனிதாபிமானம் என் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி
ரத்தம் பீறிட துடிப்பதை கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டிருந்தேன்.
இங்கு தான் எங்கோ இருக்கும் என்னை காட்டிக்கொடுத்து
கை கொட்டி சிரித்து நிற்கும் - அந்த முயல் சனியன்.

Comments

Popular posts from this blog

அம்மா வந்தாள் - தி ஜானகிராமன் - ரசனையுரை

சிறுமைகளும் அவமதிப்புகளும் - பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி

அஞ்சலை - கண்மணி குணசேகரன் - ரசனையுறை